மருத்துவ மனையில் விஜய் சேதுபதி? சோகத்தில் அவரது ரசிகர்கள்
நானும் ரவுடி தான் வெற்றிக்கு பிறகு உற்சாகத்தில் உள்ளார் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் இந்த வருடம் பல படங்கள் காத்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் தர்மதுரை படப்பிடிப்பில் விஜய் சேதுபதி வில்லனுடன் மோதும் சண்டைக்காட்சி எடுக்கப்பட்டது.
அப்போது அவர் கண்ணில் பலத்த அடிப்பட்டுள்ளது, இதை தொடர்ந்து அருகில் இருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின் மருத்துவர்கள் கூறுகையில் அவர் கண் நரம்பில் வீக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இச்செய்தி அவருடைய ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி.
0 comments so far,add yours