அஜித்தின் அடுத்த படம் ! ரசிகர்கள் உற்சாகம்
இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம்.வேதாளம் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து மீண்டும் இருவரும் அடுத்த படத்தில் இணைந்து பணி புரிய போவது உறுதியாகிவிட்டது.
சத்யஜோதிபிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது அந்தப்படம் சம்பந்தப்பட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. மே இறுதி அல்லது ஜூன் முதல்வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதை தொடர்ந்து ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது .
இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் 30 தேதி தீபாவளி வருகிறது. தீபாவளி அன்று படத்தை வெளியிட வேண்டும் என்று அதற்கேற்ப படத்தில் பணி புரியும் அனைவரையும் தேர்ந்தேடுத்து வருகிறார்கள்.
கடந்த வருட தீபாவளிக்கு வேதாளம் இந்த வருடமும் தல தீபாவளி என்று கூறுகிறார்கள்.
0 comments so far,add yours