ரஜினியின் பதில் இதுதான் - 2016 சட்டப்பேரவைத் தேர்தல்…
சென்னை விமான நிலையத்தில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அரசு பத்ம விருது அறிவித்ததை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, “மிகவும் பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!’ என்றார்.
விருது காலதாமதமாக கிடைத்ததாக உணர்கிறீர்களா? என்ற கேள்விக்கு, “சரியான நேரத்தில் விருது கிடைத்துள்ளது என்று பதில் அளித்தார்” ரஜினி.
தமிழக கலைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, “அதைப் பற்றி ஏதும் பேச விரும்பவில்லை” என்றார் ரஜினி.
2016 தேர்தலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, ஒன்றும் நினைக்கவில்லை என்று சிரித்தபடியே கூறிவிட்டு காரில் ஏறி சென்று விட்டார் ரஜினி
0 comments so far,add yours