சென்னை திரையரங்கிற்கு திடீர்ரென விசிட் அடித்த விஜய்சேதுபதி!
ஆரம்பத்தில் விஜய்சேதுபதி நடித்த படங்கள் அமோக வெற்றியை கொடுத்து வந்தபோதும், ஒருகட்டத்தில் சில படங்கள் அவருக்கு தோல்வியாகவும் அமைந்தன, ஆனால் நயன்தாராவுடன் நடித்த நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வருகிறார் விஜய்சேதுபதி. அதோடு ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தான் நடித்த படங்களில் ரசிகர்களுக்கு எந்தமாதிரியான காட்சிகள் அதிகம் பிடித்திருக்கிறது, எந்த மாதிரியான காட்சிகள் பிடிக்கவில்லை என்பதை அறிய அவர் தியேட்டர் விசிட்டும் அடிக்கிறார். அந்த வகையில், தற்போது திரைக்கு வந்திருக்கும் காதலும் கடந்து போகும் படத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு ரசிக்கிறார்கள். எந்த மாதிரியான காட்சிகளுக்கு கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள் என்பதை அறிய சில தினங்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டருக்கு திடீரென்று விசிட் அடித்தார் விஜய்சேதுபதி.
தியேட்டரில் படம் ஓடத் தொடங்கியதும் ஒரு கேரவனில் இருந்து இறங்கிய அவர், ஆப்ரேட்டர் அறைக்கு சென்று அங்குள்ள துவாரம் வழியாக சுமார் ஒரு மணி நேரம் ரசிகர்களின் நிலைபாட்டை ஆராய்ந்திருக்கிறார். அப்போது அவர்கள் ரசித்த காட்சிகளை நேரடியாகவே தெரிந்து கொண்ட விஜய்சேதுபதி, ரசிகர்கள் பல காட்சிகளை கைதட்டி ரசித்ததால் இடைவேளைக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு மிகுந்த சந்தோசத்துடன் அங்கிருந்து வெளியேறினார். இப்படி தனது ஒவ்வொரு படங்களும் திரைக்கு வரும்போதும் இதுபோன்று தியேட்டர் விசிட் அடித்து பல்ஸ் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.
0 comments so far,add yours