விஜய்யின் 60வது படம் ஆரம்பமானது
விஜய்யின் தெறி படம் ஏப்ரலில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்திற்கு பிறகு விஜய்யின் 60வது படம் பரதன் இயக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருக்கிறார்.
இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் தொடங்கியுள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு தளங்களை பார்ப்பதற்காக இயக்குனர் பரதன், ஒளிப்பதிவாளர் சுகுமார், பிரபாகரன் ஆகியோர் ஹைதராபாத் சென்றுள்ளனர்.
அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வலைதளங்களில் பரவி வருகின்றன.
0 comments so far,add yours