விக்ரமின் கருடா - பிரமாண்டமாக தொடங்குகிறது….
விக்ரம் தற்போது இருமுகன் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக அவர் நடிக்கும் படம் கருடா. திரு இயக்குகிறார். காஜல் அகர்வால் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். பிரபல இந்தி நடிகரும், இயக்குனருமான மகேஷ் மஞ்சுரேக்கர் வில்லனான நடிக்கிறார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், கிரிநந்த் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். சில்வர்லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.
வருகிற ஏப்ரல் 1ந் தேதியில் கருடா படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்குகிறது. இதற்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே 100 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சியில் நடக்கிறது. மூன்றாம்கட்ட படப்பிடிப்புகள் அகமதாபாத், லக்னோவில் நடக்கிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் அரபு நாடுகளில் படமாக்கப்படுகிறது.
0 comments so far,add yours