ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் நயன்தாரா !
நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடித்து வருகிறார். மாயா பாணியில் இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படம் கடந்த 2009-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற ஆர்ஃபன் படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த குழந்தைதான் படத்தில் பேயாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சற்குணம் தயாரிக்கும் இப்படத்தை நேமிசந்த் ஜபக் வெளியிடவுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் இப்படத்துக்கு இசையமைத்து வருகின்றனர்.
0 comments so far,add yours