பீப் பாடல் விவகாரம். சிம்புவுக்கு ஜெயில் தண்டனை கிடைக்குமா?
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தையே பெரும் பரபரப்பு ஏற்படுத்திய சிம்புவின் ‘பீப் பாடல் விவகாரம் மீண்டும் தற்போது சூடுபிடித்துள்ளது.
பீப் பாடல் காரணமாக சிம்பு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக அவர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் அவர் இன்னும் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவர் வரும் 24ஆம் தேதி கண்டிப்பாக கோவை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் சிம்புவின் வழக்கறிஞர் இந்த வழக்கு குறித்து சமீபத்தில் கருத்து கூறியபோது சிம்பு மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால் அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் இந்த பாடலை சிம்பு டம்மி வார்த்தைகள் பயன்படுத்தி பாடியிருந்ததாகவும் அவருடைய பாடலை யாரோ திருடி இண்டர்நெட்டில் பதிவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சிம்பு அப்பாவி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments so far,add yours